நடிகை சமந்தா, ட்ராலாலா மூவிங் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார். இதன் மூலம் ‘மா இண்டி பங்காரம்’ என்ற படத்தைத் தயாரிக்க இருப்பதாக அறிவித்தார். இதன் இயக்குநர் உள்ளிட்ட விவரங்கள் அறிவிக்கப் படாமல் இருந்தது.இதற்கிடையே அவர் ‘சுபம்’ என்ற படத்தைத் தயாரித்து அதில் கவுரவ வேடத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் ‘மா இண்டி பங்காரம்’ படத்தின் படப்பிடிப்பை இப்போது தொடங்கி இருக்
கிறார்.
இதை நந்தினி ரெட்டி இயக்குகிறார். ‘ஓ! பேபி’ படத்துக்குப் பிறகு இருவரும் இதில் இணைகின்றனர். கதையின் நாயகியாக சமந்தா நடிக்கிறார். குல்ஷன் தேவ்வய்யா, திகாந்த் , கவுதமி, மஞ்சுஷா முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ‘த பேமிலிமேன்’ இயக்குநர்களில் ஒருவரான ராஜ், கிளாப் அடித்து தொடங்கி வைத்தார்.
படம் பற்றி சமந்தா கூறும்போது, “இதன் கதையைக் கேட்டதுமே என் மனதைத் தொட்டது. ட்ராலாலா மூவிங் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் இதைத் தயாரித்து நடிப்பது மிகவும் வித்தியாசமான உணர்வைத் தருகிறது. இது காதல், உறவு மற்றும் வலிமையை அடிப்படையாகக் கொண்ட கதை. நந்தினி ரெட்டியுடன் மீண்டும் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.

