அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சன் “I Want To Talk’ என்ற படத்தில் நடித்ததற்காக பிலிம்பேர் விருதை வென்றார்.
ஆனால் அந்த விருதை அவர் திறமையால் வெல்லவில்லை பணம் கொடுத்தும், பிஆர் வேலைகள் செய்தும்தான் வாங்கினார் என்று சமூக வலைதளங்களில் சர்ச்சை வெடித்தது.
இந்நிலையில் இதுதொடர்பாக அபிஷேக் பச்சன் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் விளக்கம் அளித்திருக்கிறார்.

“ஒரு விஷயத்தை நான் தெளிவாக சொல்லிக்கொள்கிறேன். நான் எந்த விருதையும் PR வேலைகள் செய்தோ, பணம் கொடுத்தோ வாங்கியதில்லை.

