தினமும் 3, 4 மணி நேரங்கள் முழு கவனத்துடன் எந்த தொந்தரவும் இல்லாமல் வேலை பார்க்க விரும்புவேன். அப்போது என் அறைக்குள்கூட யாரையும் அனுமதிக்க மாட்டேன். என்னைத் தேடுவான் என்பதால் என் மகனுக்கு மட்டுமே அனுமதி. அவனும் எந்த தொந்தரவும் செய்யமாட்டான்.
அந்த தனிமையான நேரத்தில் புதிய இசையை அமைத்துப் பார்ப்பேன், புதிய விஷயங்களை முயற்சி செய்வேன், எனக்கு என்ன தெரியும், தெரியாது என்று ஆராய்வேன். நான் என்ன பண்ண நினைக்கிறோனோ அதை எந்தத் தடையும் இல்லாமல் அந்தத் தனிமையான நேரத்தில் செய்வேன்.
இன்று நிறைய சுயாதீன இசையமைப்பாளர்கள் இந்தியாவில் திறமையாக வளர்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு என்னால் முடிந்த வாய்ப்புகளை அளித்து, உதவி செய்து வருகிறேன்.
நான் நிறைய ரீல்ஸ் பார்ப்பேன். அதிலேயே திறமையான இசையமைப்பாளர்கள், பாடகர்களை அடையாளம் காண்கிறேன்” என்று சொல்லியிருக்கிறார்.