Aamir Khan: ``திரையரங்க வியாபாரத்தைப் பாதுகாக்கவே பொய் சொன்னேன்!'' - மன்னிப்புக் கேட்ட ஆமீர் கான்

Aamir Khan: “திரையரங்க வியாபாரத்தைப் பாதுகாக்கவே பொய் சொன்னேன்!” – மன்னிப்புக் கேட்ட ஆமீர் கான்


இது குறித்து அவர், “நான் கைகூப்பி மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் ‘சிதாரே ஜமீன் பர்’ யூடியூபில் வெளியாகாது என்று நான் பொய் சொன்னேன். வேறு வழியில்லாததால் இப்படிச் செய்தேன்.

படத்தின் திரையரங்க வியாபாரத்தைப் பாதுகாக்க வேண்டியிருந்தது. நான் திரையரங்குகளுக்கு மிகவும் விசுவாசமானவன், என் வாழ்க்கை சினிமாவுடன் தொடங்கியது.

எனவே, என் படங்களின் திரையரங்க வியாபாரத்தைப் பாதுகாக்க எப்போதும் முயற்சித்து வருகிறேன். இருந்தாலும், நான் பொய் சொன்னதற்காக மன்னிப்புக் கேட்கிறேன்.

ஆமீர் கான்

ஆமீர் கான்

இல்லையெனில், இந்தப் படத்திற்கான என் கனவுகள் அங்கேயே முடிந்திருக்கும். பே-பர்-வியூ மாதிரிக்கும் சந்தா மாதிரிக்கும் இடையே பெரிய வித்தியாசம் உள்ளது.

நான் ஒரு படத்தை 8 வாரங்களுக்குப் பிறகு சந்தா மாதிரியில் வெளியிடும்போது, மக்கள் என் படத்தை வாங்குவதில்லை. அவர்கள் OTT தளத்திற்கு மட்டுமே சந்தா செலுத்துகிறார்கள்.

அப்போது யாராவது அதைப் பார்க்க விரும்பினாலும் பார்க்காவிட்டாலும் அது பொருட்டல்ல. ஒரு பெரிய நிறுவனத்திடமிருந்து எனக்கு ₹125 கோடி வேண்டாம், என் பார்வையாளர்களிடமிருந்து 100 ரூபாய் கிடைப்பதே போதும்.” எனக் கூறியிருக்கிறார்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *