Abhishek Bachchan: ``எங்கள் மகள் சோஷியல் மீடியாவில் இல்லாததற்குக் காரணம் ஐஸ்வர்யா ராய்" - மனம் திறந்த அபிஷேக் பச்சன்

Abhishek Bachchan: “எங்கள் மகள் சோஷியல் மீடியாவில் இல்லாததற்குக் காரணம் ஐஸ்வர்யா ராய்” – மனம் திறந்த அபிஷேக் பச்சன்


நடிகர் அபிஷேக் பச்சனின் காளிதர் லாபட்டா ஜூலை 4-ம் தேதி ஜீ 5 ஓடிடி-ல் வெளியாகியிருக்கிறது. இந்தப் படத்துக்கான புரோமோஷன் நிகழ்ச்சிகளில் அபிஷேக் பச்சன் ஈடுபட்டுவருகிறார்.

சமீபத்தில் நயன்தீப் ரக்ஷித் என்பவருடைய யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், “எங்கள் மகள் ஆராத்யா பச்சனிடம் என் தந்தை பெரும் நடிகர், என் மனைவி உலகப் புகழ்பெற்ற நடிகை என்றெல்லாம் ஒருபோதும் பேசியதில்லை.

ஆராத்யா பச்சன் - ஐஸ்வர்யாராய் பச்சன்

ஆராத்யா பச்சன் – ஐஸ்வர்யாராய் பச்சன்

ஆனால் அவள் இப்போது வளர்ந்துவிட்டாள். எல்லாவற்றையும் புரிந்துகொள்கிறாள் என்று நம்புகிறேன். இதற்கான பெருமை முழுக்க முழுக்க அவளின் அம்மா ஐஸ்வர்யா ராய் பச்சனையே சாரும்.

ஒரு கணவனாக எனக்கு சுதந்திரம் இருக்கிறது, நான் வெளியே சென்று என் படத்துக்கான பணிகளைச் செய்கிறேன். என் மனைவி ஐஸ்வர்யா, ஆராத்யாவுடன் இணைந்து குடும்பத்தைக் கவனிக்கிறார். அவர் அற்புதமானவர், தன்னலமற்றவர். இது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *