இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்து அபிஷன் ஜீவிந்த்- அகிலா இருவரும் நன்றி தெரிவித்திருக்கின்றனர்.
“நேற்று எனக்கு மிகவும் முக்கியமான நாள். எங்கிருந்தோ வந்த ஒரு பையனை வளர்த்துவிட்டது நீங்கள் எல்லோரும் தான்.
உங்களுக்கெல்லாம் நன்றி சொல்ல வேண்டும் என்பது எங்களுடைய ஆசை. என்னிடம் அன்பாக நடந்துகொண்டிருக்கிறீர்கள்.
நான் எதை செய்தாலும் நீங்கள் (மீடியா) மக்களிடம் கொண்டி சேர்த்திருக்கிறீர்கள்.

எல்லோருக்கும் நான் மிகவும் நன்றிக்கடன்பட்டிருக்கிறேன். படம் எடுத்தப்பிறகுதான் நான் கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என்று நினைத்தேன்.
எப்போது அகிலாவை நன்றாகப் பார்த்துக்கொள்ள முடியும் என்று தோணுகிறதோ? அப்போது தான் கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என்று நினைத்தேன்.
அந்த இடத்தில் என் வாழ்க்கை மாறும் என்று நம்பியதால் தான் மேடையில் வைத்து என்னை “வருகிற அக்டோபர் மாதம் திருமணம் செய்துக் கொள்கிறாயா?” என்று கேட்டேன்.

