அப்படி பழைய மாஸ்டர்பீஸ் பாடல்கள் வெவ்வேறு காலகட்டங்களில் ரி- கிரியேட் செய்யப்பட்டிருக்கிறது. அப்படி சமீபத்தில் ரஹ்மானின் `காதல் சடுகுடு” பாடலை `மெட்ராஸ்காரன்’ திரைப்படத்தில் ரி-கிரியேட் செய்திருக்கிறார்கள். இந்தப் பாடலை ரி-கிரியேட் செய்து பின்னணி பாடகர் ஆதித்யா பாடியிருக்கிறார். இதுமட்டுமல்ல, ரஹ்மான் இசையில் முதல் முறையாக ஒரு பாடலையும் பாடியிருக்கிறார் இந்த இளைஞர். ஜெயம் ரவியின் `காதலிக்க நேரமில்லை’ திரைப்படத்தின் `லாவண்டர் நிறமே’ பாடலை பாடியதும் ஆதித்யாதான். இந்தப் பாடலுக்கு வாழ்த்துகளைக் கூறி ஒரு குட்டி சாட் போட்டோம்.