Ajith: ``க்ரஷ் என்பதை தாண்டி மனிதராக அவர் மீது ஆழ்ந்த மரியாதையும் வைத்திருக்கிறேன்!| Beyond that i had a great respect on Ajith - Maheshwari

Ajith: “க்ரஷ் என்பதை தாண்டி மனிதராக அவர் மீது ஆழ்ந்த மரியாதையும் வைத்திருக்கிறேன்!| Beyond that i had a great respect on Ajith – Maheshwari


நடிகர் மீது க்ரஷ் வந்திருக்கிறதா என ஜெகபதி பாபு கேள்வி எழுப்ப, அதற்கு பதில்தந்த மகேஷ்வரி, நடிகர் அஜித் மீதுதான் முன்பு க்ரஷ் இருந்தது.

க்ரஷ் என்பதை தாண்டி மனிதராக அவர் மீது ஆழ்ந்த மரியாதையும் வைத்திருக்கிறேன். நாங்கள் இருவரும் இரண்டு படங்களில் சேர்ந்து வேலை செய்திருக்கிறோம்.

படப்பிடிப்பும் தள்ளிப் போனதால் நாங்கள் இருவரும் கிட்டத்தட்ட 1.5 வருடங்கள் ஒன்றாக வேலை செய்தோம். கடைசி நாள் படப்பிடிப்பில் மீண்டும் இவரைப் பார்க்க முடியாதென சோகமாக அமர்ந்திருந்தேன்.

அப்போது அவர் என்னிடம் மஹி, `நீ என்னுடைய இளைய சகோதரியைப் போல இருக்கிறாய். உனக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் தயங்காமல் என்னிடம் கேள்’ எனக் கூறினார்.

(ஜாலியாக) அந்த வார்த்தைகள் என்னை மனமுடையச் செய்தது. தொடங்குவதற்கு முன்பே அது முடிந்துவிட்டது.” எனப் பகிர்ந்துக் கொண்டார்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *