இயக்குநர் ஆனந்த் எல். ராய் பேசுகையில், “பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு, இதுபோன்ற ஒரு மாற்றத்திற்கு நடிகர்கள் தேவைப்பட மாட்டார்கள் என்று நாங்கள் கற்பனைகூட செய்து பார்க்கவில்லை.
இப்போது, இயந்திரங்கள் திரைப்படங்களை உருவாக்கும் என நம்புகிறார்கள். நாளை, யாராவது ஒருவர், ஒரு திரைப்படத்தைச் சட்டப்படி மாற்றலாம் அல்லது பார்வையாளர்களுக்குச் செல்வதற்கு முன்பே அதைத் திரிபு செய்யலாம் என்று சொன்னால், என்ன ஆகும்?
ஐபி (IP – Intellectual Property Act) சட்டப்படி ‘அம்பிகாபதி’ திரைப்படம் முழுமையாக அவர்களுக்குச் சொந்தமானது என்பதை நான் புரிந்து கொள்கிறேன்.

அவர்கள் அதை வெளியிடலாம், அதிலிருந்து அதிகப் பணம் சம்பாதிக்கலாம். அதில் எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை. ஆனால், ஏன் திரிபு செய்ய வேண்டும்?
கதையையும் அதன் மனநிலையையும் மாற்ற முடியாது. இப்படியான ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கிய ஒரு நடிகருக்கு, அந்தக் கதாபாத்திரம் இறுதியில் இறந்துவிடும் என்பது தெரியும்.