அனிருத் பேசுகையில், “மலையாள சினிமாவை எனக்கு ரொம்பவே பிடிக்கும். எனக்கு பிடித்த சினிமா துறைகளில் ஒன்று மல்லுவுட். கூடிய விரைவில் அங்கு என்னுடைய முதல் திரைப்படத்தைச் செய்ய காத்திருக்கிறேன்.
எனக்கு மலையாள சினிமாவில் ஃபகத் பாசில், துல்கர் சல்மான் எனப் பலரையும் பிடிக்கும்.
சமீபத்தில், சுஷின் ஷ்யாம் இசையமைத்திருந்த ‘குதந்திரம்’ பாடல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை நாங்கள் பேசிக் கொள்வோம்.
அதுபோல, மலையாள சினிமாவின் இளம் இசையமைப்பாளர்கள் பலரையும் எனக்குப் பிடிக்கும்.
ஜேக்ஸ் பிஜோயும் அழகாக இசையமைத்துக் கொண்டிருக்கிறார்.” என்றவரிடம் ரேபிட் ஃபயர் வடிவில் கேள்விகள் கேட்கப்பட்டன.
அதில் ஒரு நாள் யார் கண்ணுக்கும் தெரியாத வரம் பெற்றால் என்ன செய்வீர்கள் எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அனிருத், “அப்படி யார் கண்ணுக்கும் தெரியாமல் இருந்தால் முதலில் பஸ்ஸில் பயணிப்பேன்.
பள்ளி, கல்லூரி நாட்களில் எப்படி பயணித்தோமோ, அப்படியே பயணிக்க விரும்புகிறேன். அதை இப்போது மிஸ் செய்கிறேன். வெளிநாட்டிற்குச் சென்றால் என்னால் அதைச் செய்ய முடியும். ஆனால், இந்தியாவில் அதைச் செய்ய வேண்டும் என்பதுதான் ஆசை.” எனக் கூறினார்.