Anurag Kashyap: "அனுராக்கின் மதுப்பழக்கத்தால்..." - காஷ்மீர் ஃபைல்ஸ் இயக்குநரின் சர்ச்சை கருத்துக்கு அனுராக் பதில் | Vivek Agnihotri | Anurag Kashyap Drunkard

Anurag Kashyap: “அனுராக்கின் மதுப்பழக்கத்தால்…” – காஷ்மீர் ஃபைல்ஸ் இயக்குநரின் சர்ச்சை கருத்துக்கு அனுராக் பதில் | Vivek Agnihotri | Anurag Kashyap Drunkard


அவர் பேசுகையில், “நான் அனுராக் காஷ்யப்புடன் இணைந்து பணியாற்றியிருக்கிறேன். நாங்கள் ‘கோல்’ என்ற படத்தில் ஒன்றாக வேலை செய்தோம்.

அவர் அந்தப் படத்தின் வசனகர்த்தாவாக இருந்தார். சயிஃப் அலி கான் மற்றும் பிரியங்கா சோப்ரா முதலில் நடிக்க இருந்தனர்.

ஆனால், அப்போது சயிஃப்புக்குச் சில தனிப்பட்ட பிரச்னைகள் இருந்ததால் அவர் விலகிவிட்டார்.

பின்னர் நாங்கள் ஜான் மற்றும் பிபாஷாவை இணைத்தோம். அனுராக் அந்தக் காலத்தில் அதிகமாக மது அருந்துவார். அதனால் அவருக்கு நேரத்தின் மதிப்பு தெரியாது.

பின்னர் அவர் விக்ரமாதித்யா மோட்வானேவைப் படத்தின் எழுத்துப் பணிகளுக்கு அழைத்து வந்தார்.

‘இவர் உதவியாக இருப்பார்’ எனக் கூறி விக்ரமாதித்யா மோட்வானேவை அறிமுகப்படுத்தினார். படிப்படியாக எல்லா பணிகளும் விக்ரமாதித்யாவிடம் ஒப்படைக்கப்பட்டன.

நான் உருவாக்க விரும்பியது வேறு. அவர்களின் பார்வை முற்றிலும் வேறு ஒன்றாக இருந்தது. இறுதியில், நாங்கள் மோதல் போக்கிலிருந்தோம்.

இந்தப் பிரச்னையைத் தொடர்ந்து, தயாரிப்பு நிறுவனம் அனுராக்குடன் பேசியது. அனுராக்கைக் கையாள்வது மிகவும் கடினமாகிவிட்டது,” எனப் பேசியிருக்கிறார்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *