Bison: 'எங்கள் படங்களில் அன்பு மட்டும் தான் பிராதனம்' - பைசன் வெற்றிவிழாவில் பா.ரஞ்சித் பேச்சு|Pa.Ranjith appreciates Mari Selvaraj for Bison

Bison: ‘எங்கள் படங்களில் அன்பு மட்டும் தான் பிராதனம்’ – பைசன் வெற்றிவிழாவில் பா.ரஞ்சித் பேச்சு|Pa.Ranjith appreciates Mari Selvaraj for Bison


இந்தக் கேள்விக்கு பதில் தேடுவதற்கான‌ முயற்சிதான் எங்களது சினிமா. நாங்கள் மக்களிடமிருந்து விலகும் சினிமாவை எடுக்கவில்லை. ஒவ்வொரு முறையும் அவர்களை நெருங்கதான் சினிமா எடுக்கிறோம். மக்கள் விரும்பும் சினிமாவை எடுக்க முயற்சிக்கிறோம். அவர்களை கற்பிப்பதற்காக படங்களை எடுக்கிறோம். இதில் சில தோல்விகள் வரலாம்.

மாரி செல்வராஜ் தொடர்ந்து வெற்றிப்படங்களை எடுத்துக் கொண்டிருக்கிறார் என்பதில் எனக்கு ஆச்சரியம்… சந்தோஷம். இது சாதாரண விஷயம் கிடையாது.

இப்போது படம் வெளியாவதற்கு முன்பே, இந்தப் படங்களைப் பார்க்காதீர்கள்… இது சாதிப் படம் என்கிற பிம்பத்தைக் கட்டமைக்கிறார்கள்.

பைசன் வெற்றிவிழா

பைசன் வெற்றிவிழா

இது ஒரு விளையாட்டுப் படம். இதில் ஒருவன் முன்னேற எப்படி சமூக அழுத்தங்களைச் சந்திக்கிறான் என்பது காட்டப்பட்டுள்ளது.

இதை மாரி செல்வராஜ் கவனமாகக் கையாண்டிருக்கிறார். இதன் மூலம் மக்களை பிரித்துவிடக்கூடாது என்று அன்புடனும், கவனமுடனும் செயல்பட்டிருக்கிறான்.

அந்த அன்பு தான் சமத்துவம். அது எப்படி இன்னொரு மனிதனுக்கு எதிரானதாக மாறும்?

மனிதனுக்குள் இருக்கும் பிரச்னையைப் பேசுவது எப்படி வெறுப்பாக மாறும்?

எப்படியாவது நாம் அனைவரும் ஒன்று சேர்ந்துவிட வேண்டும் என்கிற அன்பு மட்டும் தான் பிரதானம். வெறுப்பை அழிப்பதற்கான முயற்சிதான் இது. ஆனால், வெறுப்பை உருவாக்க முயற்சிக்கிறார்கள்” என்று பேசியிருக்கிறார்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *