அதற்குப் பிறகு எனக்கு நீச்சல் பழக்கமே இல்லை. இந்தப் படத்தில் நடிக்கும் போது கிணற்றில் குதிக்கும் படியான ஒரு காட்சி இருந்தது. என்னிடம் மாரிசார் நீச்சல் தெரியும்ல எனக் கேட்டார். நான் தெரியும் எனத் தலையாட்டினேன்.
உடனே குதிக்கச் சொன்னார். அனுபமா குதித்து நீந்தினார். நான் தண்ணீரில் மூழ்கிக்கொண்டே இருந்தேன். சில வினாடிகள் என் மனதில் “அவ்வளவுதான் நம் வாழ்க்கை’ என மின்னல் போல தோன்றியது.

அடுத்த வினாடி கண் திறந்தபோது, கூலிங் கிளாஸ், ஷூவுடன் என்னை தண்ணீரில் குதித்து என்னைக் காப்பாற்றினார் மாரி சார். அவ்வளவு நம்பிக்கைக்குரியவர் மாரிசார்.
இந்த படத்தில் ஸ்போர்ட்ஸ், குடும்பம் , ரொமான்ஸ் என எல்லாமே இருக்கின்றது. மாரி சார் எடுத்த படங்களிலே இதுவரைக்கும் இல்லாதது இந்த படத்தில் ஏதோ ஒன்று இருக்கிறது.
கடைசியாக திருநெல்வேலி ஊர் மக்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். ஏனென்றால் நான் கேரளத்தைச் சேர்ந்த ஒரு மலையாளி எனக்கு தமிழ் கற்றுக் கொடுத்து, தென் தமிழகத்தில் ஒருவராக மாற்றிவிட்டார்கள். அவர்களின் அன்புக்கு நன்றி.” எனக் கலங்கியபடி பேசி முடித்தார்.