அதுக்கு நிறைய காரணம் இருக்கு. அதை இப்போ சொல்ல விரும்பல. ஆனால் இந்த திரைப்படத்திற்காக முதல்முறையாக மூணு இடத்துக்கு வெளியில போக வேண்டிய சூழல் ஏற்பட்டது.
இந்தப் படத்துக்காக மாரி செல்வராஜ் செய்தியாளர்களை சந்தித்தபோதெல்லாம் ஒரேமாதிரியான கேள்விகள் வந்துகிட்டே இருந்தது.
‘நீங்க ஏன் இந்த மாதிரி படம் எடுக்குறீங்க? நீங்க சமூகத்துக்குள்ள ஒரு பிரச்சனை உண்டு பண்ண நினைக்கிறீங்களா?”. இந்தக் கேள்வி எவ்வளவு அபத்தமான கேள்வி…

கண்ணுக்குத் தெரியாத சாமி, இல்லாத பேய் படங்களை எடுக்கும்போது, கண்ணுக்கு தெரியிற சாதியக் கொடுமையைப் பற்றி, வலியை, துன்பத்தைப் பேசுறதுனு தப்புனு எப்படி கேள்வி கேக்குறீங்க…
பொதுவெளியில் அரசியல் சார்ந்தவங்க கருத்து தெரிவிக்கிறாங்கனா அது அவங்களோட அரசியல் நிலைபாடு. ஒரு படம் எடுக்கப்படுகிறது.
அதற்கான எதிர் கருத்து இருந்தா அதை முன்வச்சி பேசுங்க. மிகப்பெரிய வெற்றிகள் கொடுத்த எல்லா இயக்குனர்களுக்கும் அந்தப் படத்துக்கான நடிகர்களை அந்தப் படம்தான் தேர்வு செய்யும். அப்படிதான் பைசன்.

