மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம், ரஜிஷா விஜயன், அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில், இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையில் வெளியாகியிருக்கும் படம் “பைசன்’.
இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. திரைப்பிரபலங்கள் பலரும் இப்படத்தைப் பாராட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னையில் பைசன் படத்தின் வெற்றிவிழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினர் கலந்துகொண்டு நன்றி தெரிவித்தனர்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய பைசன் படத்தின் கதாநாயகன் துருவ் விக்ரம், “கொஞ்சம் பதட்டமா இருக்கு. இந்தப் படத்துக்கு ஆதரவு கொடுத்த ஊடக நண்பர்கள் எல்லோருக்கும் ரொம்ப நன்றி.
நம்ம படத்தை மக்களிடம் கொண்டுபோய் சேர்த்திருக்கீங்க. இந்தப் படத்துக்காக உழைத்த எல்லாரும் பெரும் உழைப்பை போட்டிருக்காங்க.
இந்த படத்துல சண்டை காட்சிகள்ள நிறைய ஃபைட்டர்ஸ் உண்மையா அடி வாங்கினாங்க. எல்லாமே படத்துக்கு ஏற்றதுபோல ரொம்ப இயல்பா இருந்துச்சு.
பசுபதி சார் நான் முதல் நாள் ஸ்பாட்ல பாக்கும்போது ஏர் உழும் சீன் தான் எடுத்தாங்க. நேர்ல அவரைப் பார்க்கும்போது பெரிய பிரம்மிப்பா இருந்துச்சு.

