மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம், ரஜிஷா விஜயன், அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில், இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையில் வெளியாகியிருக்கும் படம் “பைசன்’.
இந்நிலையில் ‘பைசன்’ குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அமீர், ” கருத்து உடன்பாடு உள்ளதால்தான் இந்த திரைப்படத்தில் இணைந்து நடித்தேன்.
சாதிய, மத மோதல்கள் நீங்க வேண்டும், மனிதர்களை சக மனிதர்கள் நேசிக்க வேண்டும், கடவுள் இருக்கிறது அல்லது இல்லை என்கிற மாபெரும் விவாதங்களை கடந்து அனைத்து மனிதர்களும் ஒரு தாய் வயிற்றிலிருந்து பிறந்தவர்கள், எல்லோரும் சமம் என்கிற கருத்தை பின்பற்றுகிறவன் நான்.
அப்படியிருக்கும்போது இந்த கருத்தியலை ஒன்றி யார் திரைப்படங்களைக் கெடுக்கிறார்களோ அவர்களோடு இருப்பது என்னுடைய கடமை என்று நான் நினைக்கிறேன்.
எனவே இந்த திரைப்பட கதையுடன் நான் ஒத்துப் போகிறேன். நீங்கள் கேட்பதைப் போல திரைப்படத்திற்கு சின்ன சின்ன விமர்சனங்கள் வரலாம்.