துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள பைசன் (காளமாடன்) திரைப்படம் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் இந்தத் திரைப்படத்தில் அனுபாமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி, லால், அமீர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
இத்திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய இந்தப் படத்தின் நாயகன் துருவ் விக்ரம் தன்னுடன் இணைந்து நடித்த சக நடிகர்கள், நடிகைகள், கபடி விளையாட்டு வீரர்கள், மேக்கப் ஆர்ட்டிஸ்ட், பிசியோதெரபிஸ்ட், ஓட்டுநர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்.

தொடர்ந்து பேசியவர், “பசுபதி எனது தந்தையின் முதல் படத்தில் வில்லனாகவும் அடுத்த படத்தில் அண்ணனாகவும் இப்பொழுது பைசன் படத்தில் தனக்கு அப்பாவாகவும் நடித்ததை நான் ஒரு ஸ்பிரிச்சுவல் சைக்கிளாக பார்க்கிறேன்.
மேலும், எனக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்ட சித்த மருத்துவர் ஒருவர் இதுவரை நான் எந்த ஒரு சினிமாவையும் பார்த்ததில்லை. ஆனால் இந்த பைசன் திரைப்படத்தை பார்ப்பேன் என அவர் கூறியது மிகவும் மகிழ்ச்சியளித்தது.
நான் சிறு வயது முதலே என் அம்மாவை பெருமிதம் அடைய செய்ய பல முயற்சிகளை எடுத்துள்ளேன். ஆனால்,என் கல்வியின் மூலம் அதை நிறைவேற்ற முடியவில்லை. இந்த படத்தை அவர்கள் பார்த்த பிறகு பெருமிதம் அடைவார்கள் என நாம் நம்புகிறேன் என்றார்.” என்றார்.