Bison: `` ரஞ்சித், மாரி செல்வராஜ் வந்து திரைப் பார்வையை மாற்றியிருக்கிறார்கள்" - நடிகர் பசுபதி| Bison: `` Ranjith and Mari Selvaraj have come and changed the screen vision'' - Actor Pasupathi

Bison: “ ரஞ்சித், மாரி செல்வராஜ் வந்து திரைப் பார்வையை மாற்றியிருக்கிறார்கள்” – நடிகர் பசுபதி| Bison: “ Ranjith and Mari Selvaraj have come and changed the screen vision” – Actor Pasupathi


மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம், ரஜிஷா விஜயன், அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில், இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையில் வெளியாகியிருக்கும் படம் “பைசன்’.

இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. திரைப்பிரபலங்கள் பலரும் இப்படத்தைப் பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னையில் பைசன் படத்தின் வெற்றிவிழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினர் கலந்துகொண்டு நன்றி தெரிவித்தனர்.

மாரி செல்வராஜ் - ரஞ்சித் - துருவ்: பைசன் வெற்றிவிழா

மாரி செல்வராஜ் – ரஞ்சித் – துருவ்: பைசன் வெற்றிவிழா

அதன் அடிப்படையில் இந்த நிகழ்வில் உரையாற்றிய நடிகர் பசுபதி, “இந்த படத்தை இன்னைக்கு ஒரு பெரிய வெற்றி படமா மாற்றியதில் மிகப்பெரிய பங்கு ஊடக நண்பர்களுடையது.

ரஞ்சித்துடன் எனக்கு இது மூன்றாவது படம். எனக்கும் ரஞ்சித்துக்குமிடையே ஒரு அன்பும், உறவும் இருக்கிறது. ரஞ்சித் மாரி செல்வராஜ் போன்ற இயக்குநர்கள் வந்தபிறகு திரைப்படங்களின் பார்வை மாறியிருக்கிறது.

அதற்காக ரஞ்சித்துக்கு என்னுடைய நன்றிகள். மாரி செல்வராஜ் அதீதமான கலகக்காரன். படப்பிடிப்பு தளத்தில் அவரின் வேகமும், ஆற்றலும், சுறுசுறுப்பும் நம்மிடமும் ஒட்டிக்கொள்ளும்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *