இன்னொரு முக்கியமான விஷயம். ‘பைசன்’ படத்தில் கபடியை எங்கையும் ஏமாற்றவே இல்ல. தொடக்கத்தில், க்ளைமேக்ஸ் காட்சியில் எனக்கும் துருவ் சாருக்கும் நல்ல கனெக்ட் இருக்கணும்னு சில காட்சிகளைக் காட்டினாரு.
அசலாக, டச்சில் இருந்து தொடங்கி கபடியின் அத்தனை நுணுக்கங்களைப் பாலோ பண்ணி காட்சியில் துருவ் சார் கபடி ஆடியிருந்தாரு.
அப்போவே, அவரை நீங்க துருவ்னு கூப்பிடாதீங்க, கிட்டான்னு சொல்லியே கூப்பிடச் சொல்லிட்டாங்க. பிறகு, நானும் துருவ் சாரும் க்ளோஸ் ஆகிட்டோம்.

துருவ் சாரும் ரொம்ப ஆர்வமாக கபடி ஆடினாரு. சில சமயங்களில் ஷூட்டிங்கில் இருக்கோம்ங்கிறதையே மறந்துட்டு உண்மையாக கபடி ஆடினார்னு சொல்லலாம்.
இந்தப் படத்துக்காக அவர் பல கஷ்டங்களைச் சந்திச்சிருக்காரு. இந்த சமயத்தில் என்னுடைய மனைவிக்கும், குடும்பத்துக்கும் பெரிய நன்றியைச் சொல்லிக்கிறேன். அவங்கதான் எனக்குள்ள இருந்த தயக்கங்களை உடைச்சு நடிக்கிறதுக்கு அனுப்பினாங்க. நன்றி எல்லாத்துக்கும்!” எனக் கூறி முடித்துக் கொண்டார்.