BRO CODE தலைப்பைப் பயன்படுத்த ரவி மோகனுக்குத் தடை; உத்தரவிட்ட டெல்லி உயர் நீதிமன்றம் | Delhi High Court bans Ravi Mohan from using the title BRO CODE

BRO CODE தலைப்பைப் பயன்படுத்த ரவி மோகனுக்குத் தடை; உத்தரவிட்ட டெல்லி உயர் நீதிமன்றம் | Delhi High Court bans Ravi Mohan from using the title BRO CODE


நடிகர் ரவி மோகன் நடிப்பில் கராத்தே பாபு, பராசக்தி, ஜெனி ஆகிய படங்கள் திரைக்கு வரவிருக்கின்றன.

இதுமட்டுமல்லாமல், இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கும் ரவி மோகன், யோகி பாபுவை வைத்து `An Ordinary Man” என்ற படத்தை இயக்குகிறார்.

மேலும், `ரவி மோகன் ஸ்டுடியோஸ்’ எனும் தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கியிருக்கும் ரவி மோகன், `ப்ரோ கோட் (BRO CODE)’ என்ற படத்தைத் தயாரிக்கிறார்.

டிக்கிலோனா படத்தின் இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கும் இப்படத்தில் ரவி மோகன், எஸ்.ஜே. சூர்யா, மலையாள நடிகர் அர்ஜுன் அசோகன், யோகி பாபு, ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஸ்ரீ கௌரி பிரியா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இவ்வாறிருக்க, BRO CODE என்ற பெயரில் பல ஆண்டுகளாக மதுபானம் தயாரித்து விற்பனை செய்துவரும் இன்டோ-ஸ்பிரிட் பீவரேஜஸ் நிறுவனம் (Indospirit Beverages Pvt Ltd), BRO CODE பெயரைப் பயன்படுத்த வேண்டாம் என்று தயாரிப்பு நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது.

அதைத்தொடர்ந்து தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்துக்குச் செல்லவே, அங்கு தயாரிப்பு நிறுவனத்துக்குச் சாதகமான உத்தரவு கிடைத்தது.

இதனால், மதுபான நிறுவனம் இந்த விவகாரத்தில் படத் தயாரிப்பு நிறுவனத்துக்கெதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வர்த்தக முத்திரை மீறல் வழக்கைத் தொடுத்தது.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *