Coolie: ரஜினியின் கூலி படத்தில் நான் நடிக்கிறேனா?- சந்தீப் கிஷன் அளித்த விளக்கம்

Coolie: ரஜினியின் கூலி படத்தில் நான் நடிக்கிறேனா?- சந்தீப் கிஷன் அளித்த விளக்கம்


மாநகரம், மாயவன், தனுஷுடன் கேப்டன் மில்லர், ராயன் உள்ளிட்டப் படங்களில் நடத்தவர் பிரபல தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன். தொடர்ந்து லைகா தயாரிப்பில், ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் நடித்து வருகிறார். தற்போது அவரது நடிப்பில் தெலுங்கில் வெளியாகி இருக்கும் திரைப்படம் ‘மசாக்கா’.

mazaka movie review Thedalweb Coolie: ரஜினியின் கூலி படத்தில் நான் நடிக்கிறேனா?- சந்தீப் கிஷன் அளித்த விளக்கம்
மசாக்கா

இப்படத்தில் இவருடன் சேர்ந்து ராவ் ரமேஷ், அன்ஷுல், ரிது வர்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். கடந்த 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தத் திரைப்படம் மக்களிடடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதனிடையே சந்தீப் கிஷன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி படத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.

ஆனால் கூலி படத்தில் அவர் நடிக்கவில்லை என்று சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாகப் பேசிய அவர், ” கூலி படத்தில் நான் நடிக்கவில்லை. கூலி படிப்பிடிப்புக்கு சென்று, ரஜினிகாந்த் மற்றும் லோகேஷ் கனகராஜ் இருவரைச் சந்தித்தேன்.

சந்தீப் Thedalweb Coolie: ரஜினியின் கூலி படத்தில் நான் நடிக்கிறேனா?- சந்தீப் கிஷன் அளித்த விளக்கம்
சந்தீப் கிஷன்

படத்தின் 45 நிமிடக் காட்சிகளையும் பார்த்தேன். கூலி திரைப்படம் நிச்சயம் ரூ. 1000 கோடியைத் தாண்டி வசூல் செய்யும்” என்று கூறியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *