Coolie Monica song: ``மகாசிவராத்திரி நாளில், நான் உண்ணாவிரதம் இருந்தபோது..." - மோனிகா பாடல் குறித்து பூஜா ஹெக்டே

Coolie Monica song: “மகாசிவராத்திரி நாளில், நான் உண்ணாவிரதம் இருந்தபோது…” – மோனிகா பாடல் குறித்து பூஜா ஹெக்டே


நடிகர் ரஜினி காந்த், அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான், உபேந்திரா எனப் பெரும் திரைப்பட்டாளமே நடித்த கூலி படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கிறார்.

இந்தத் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இப்படத்தில் இடம் பிடித்துள்ள “மோனிகா’ என்ற பாடல் கடந்த வாரம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

பூஜா ஹெக்டே சௌவின் ஷாஹிரின் ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

அனிருத் இசையமைத்துள்ள இந்தப் பாடல் படமாக்கப்பட்ட வீடியோவை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் நடிகை பூஜா ஹெக்டே, “மோனிகா மீதான உங்கள் அன்புக்கு நன்றி. மோனிகா என் கேரியரில் மிகவும் கஷ்டமான பாடல்களில் ஒன்று. காரணம், கடுமையான வெயில், தூசி, கொப்புளங்கள் இவை எல்லாவற்றையும் விட அதிக எனர்ஜி தேவைப்படும் நடன அசைவுகள் கொண்டது (எனது தசைநார் கிழிந்த பிறகும் நடந்த எனது முதல் நடனப் படப்பிடிப்பு).



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *