இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பிலேயே இந்த சர்ச்சைக் குறித்துப் பேசிய நடிகர் சந்தானம், “பெருமாள்’ கடவுள், ‘கோவிந்தா கோவிந்தா’ பாடலையும் படத்தில் கிண்டல் செய்வதாக இல்லை. நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன். நான் கடவுளைக் கிண்டல் செய்யமாட்டேன்” என்று விளக்கமளித்திருந்தார்.

இந்நிலையில் நேற்று திருப்பதி சென்றிருந்த தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம், “இந்து மதத்தை அவமதிக்கும், கடவுளை அவமதிக்கும் சர்ச்சைக்குரிய இந்தப் பாடலை நீக்க வேண்டும்” என ஆந்திரா துணை முதல்வராக இருக்கும் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியினர் கோரிக்கை வைத்துள்ளனர். எடப்பாடி பழனிசாமியும் பாடலை பார்த்துவிட்டு இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருக்கிறார்.
இதுகுறித்து திருமலை காவல் நிலையத்தில் ஜனசேனா கட்சியினர் புகாரும் அளித்திருக்கின்றனர்.