DD Next Level: "நான் கடவுளைக் கிண்டல் செய்யமாட்டேன்" - 'கோவிந்தா' பாடல் விவகாரத்தில் சந்தானம் |Santhanam |Arya

DD Next Level: “நான் கடவுளைக் கிண்டல் செய்யமாட்டேன்” – ‘கோவிந்தா’ பாடல் விவகாரத்தில் சந்தானம் |Santhanam |Arya


செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த சந்தானம், “‘கோவிந்தா’ பாடல் கடவுளைக் கிண்டல் செய்வது கிடையாது. நிறையப் பேர் நிறைய விஷயங்களைச் சொல்வார்கள்.

படம் பார்க்கும் பலரும் இது சரியில்லை, மாற்ற வேண்டும் எனப் பரிந்துரை செய்வார்கள். ஆனால், அவற்றையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது.

அப்படி வாழவும் முடியாது. நீதிமன்றம் சொல்வதையும், தணிக்கைக் குழு சொல்வதையும் தான் தமிழ் சினிமாவில் செய்ய முடியும்.

Santhanam at DD Next Level Press Meet

Santhanam at DD Next Level Press Meet

போகிறவர்கள், வருகிறவர்கள் சொல்வதைக் கேட்டுப் பண்ண முடியாது. ‘பெருமாள்’ கடவுள், ‘கோவிந்தா கோவிந்தா’ பாடலையும் படத்தில் கிண்டல் செய்வதாக இல்லை. நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன். நான் கடவுளைக் கிண்டல் செய்யமாட்டேன்.

எல்லையில் நிலவும் பதற்றமான சூழலைக் கருத்தில் கொண்டு படத்தின் வெளியீட்டுத் தேதியையும் தள்ளிவைக்க யோசித்தோம்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *