Desinguraja 2 : ``உன்னையெல்லாம் யார்டா வில்லனா போட்டது என எழில் சார் திட்டினார்" - ரவி மரியா

Desinguraja 2 : “உன்னையெல்லாம் யார்டா வில்லனா போட்டது என எழில் சார் திட்டினார்” – ரவி மரியா


இன்ஃபினிட்டி கிரியேஷன்ஸ் சார்பில் பி.ரவிசந்திரன் தயாரிப்பில், இயக்கிய இயக்குநர் எழில் இயக்கியிருக்கும் படம் தேசிங்கு ராஜா-2.

ஜூலை 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் வித்யாசாகர் இசையமைத்திருக்கிறார். நேற்று இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

Desinguraja-2 audio launch

Desinguraja-2 audio launch

அதில் பேசிய ரோபோ சங்கர், “கால் நூற்றாண்டையும் கடந்து காமெடியில் டஃப் கொடுக்கும் ஒரே இயக்குநர் எழில்சார். குழந்தைகளுக்கு மத்தியில் எனக்கான அங்கீகாரம் கிடைத்தது “வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில்தான். விமல் பேசும்போது அவரின் வாய் அசையவே அசையாது. அப்படியான சர்ட்டிலான நடிகர். இந்தப் படத்தில் ஈகோவே இல்லாமல் எல்லா காமெடி நடிகர்களும் சக நடிகர்களுக்கு ஸ்பேஸ் கொடுத்து நடித்திருக்கிறார்கள். வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் 2 விரைவில் வரவேண்டும் என்ற வேண்டுகோளையும் இந்த மேடையிலேயே வைக்கிறேன்.” என்றார்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *