dhanush's movie idly kadai: இட்லி கடை இசை வெளியீட்டு விழாவில் இன்பனு உதயநிதி; தனுஷின் திட்டம் என்ன?

dhanush’s movie idly kadai: இட்லி கடை இசை வெளியீட்டு விழாவில் இன்பனு உதயநிதி; தனுஷின் திட்டம் என்ன?


நடிகர் தனுஷின் “இட்லி கடை’ படத்தின் இசைவெளியீட்டு விழா இந்த வாரம் சென்னையில் நடக்கிறது. வரும் அக்டோபர் முதல் தேதியில் படம் திரைக்கு வருவதால் டப்பிங் மற்றும் நிறைவு கட்ட போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் பரபரக்கின்றன.

'இட்லி கடை'

‘இட்லி கடை’

தனுஷின் 53வது படமாக உருவாகியுள்ள ‘இட்லி கடை’ படத்தை ‘டான் பிக்சர்ஸ்’ ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ளார். இந்தப் படத்தில் தனுஷ், நித்யா மெனென், சத்யராஜ், பார்த்திபன், அருண் விஜய், ஷாலினி பாண்டே, சமுத்திரக்கனி எனப் பலரும் நடித்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். ‘என்ன சுகம்’, ‘என்சாமி தந்தானே..’ என இரண்டு பாடல்கள் இதுவரை வெளியாகியுள்ளது. இந்நிலையில் மூன்றாவது சிங்கிளும் ரெடியாகி வருகிறது. படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் சார்பில் இன்பன் உதயநிதி வெளியிடுகிறார்.

Inban Udhayanidhi - Red Giant Movies

Inban Udhayanidhi – Red Giant Movies

திரைத்துறையில் அடியெடுத்து வைக்கும் இன்பனுக்கு தனுஷும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தார். ஆக, இந்த இசை வெளியீட்டு விழாவில் இன்பன் உதயநிதியை அறிமுகம் செய்து வைக்கும் விழாவாகவும் எதிர்பார்க்கலாம். சில சர்ப்ரைஸ்கள் காத்திருக்கின்றன என்ற பேச்சு உள்ளது.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *