சண்முகம் முத்துசாமி இயக்கத்தில், நடிகர் ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் “டீசல்’.
இந்தத் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று ( அக்.14) நடைபெற்றிருக்கிறது.

இப்படத்தில் வில்லனாக நடித்திருக்கும் ரிஷி ரித்விக் பேசியபோது, ” எனக்கு இந்தப் படத்துல நடிக்குற வாய்ப்பைக் கொடுத்த சண்முகம் (இயக்குநர்)அண்ணனுக்கு நன்றி.
எனக்கு சினிமாவில பெருசா பேக்ரவுண்ட் இல்ல. ஆனா எனக்கு ஒரு கூட பிறந்த அண்ணனா சப்போர்ட் பண்ணிருக்காரு.
அதுமட்டுமில்லாம இந்தப் படத்துல ஒரு நல்ல கேரக்டர் கொடுத்துருக்காரு. எனக்கு புடிச்ச மீனவ கேரக்டரையே கொடுத்துருக்காரு.