Dragon: `அந்த பாட்டுல வர்ற மாதிரி என் காதலிகூட 18 நாடுகள் போயிருக்கேன்!' - சீக்ரெட்ஸ் சொல்லும் டீம்! | ashwath marimuthu and pradeep ranganathan interview about dragon

Dragon: `அந்த பாட்டுல வர்ற மாதிரி என் காதலிகூட 18 நாடுகள் போயிருக்கேன்!’ – சீக்ரெட்ஸ் சொல்லும் டீம்! | ashwath marimuthu and pradeep ranganathan interview about dragon


இந்தக் காட்சிகளை நான் வேணும்னு படத்துக்குள்ள வைக்கல. படத்துல இந்த விஷயங்கள் வைக்கிறதுக்கான இடங்கள் இருந்தது. இந்தப் பாடல் மாதிரி `கதைப்போமா’ பாடலுக்குப் பின்னாடியும் ஒரு சோகமான கதை இருக்கு.” என்றவர், “ எனக்கு வி.ஜே சித்து விலாக்ஸ் சேனல் ரொம்ப பிடிக்கும். அவங்க சேனலோட தொடக்க காலத்திலேயே நான் அவங்களை இந்தப் படத்துக்கு கமிட் பண்ணிட்டேன். அவங்களோட ஹைலைட் விஷயங்கள் எதையும் நான் படத்துல வைக்கல. அவங்களை இந்தப் படத்துல நீங்க நடிகர்களாக பார்ப்பீங்க. இதை தாண்டி படத்துல ஸ்நேகா மேம் கேமியோ பண்ணியிருக்காங்க.” என்றார்.

இவரை தொடர்ந்து நம்மிடையே பேசிய பிரதீப் ரங்கநாதன், “ படத்துல என்டர்டெயின்மென்ட் இருக்கணும்னு பார்த்து பார்த்து பண்ற விஷயங்கள்தான். ஆனால், அந்த என்டர்டெயின்மென்ட்னா காமெடி மட்டும் கிடையாது. படத்தை தியேட்டர்ல பார்க்கும்போது சில விஷயங்களுக்கு கத்துவாங்க. அப்படியான விஷயங்கள் இருக்கணும்னு நான் விரும்புவேன். டிரைலர்ல என்னுடைய ஸ்கூல் காட்சியில எனக்கு எதிர்ல நிற்கிற ஆள் ரவி மோகன் சார்னு சொல்றாங்க. ஆனால், அந்த கதாபாத்திரத்துல அவர் நடிக்கல.” என்றார்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *