Dragon: "கடைசி 20 நிமிடங்கள் கண் கலங்கச் செய்தது'' - 'டிராகன்' படத்தைப் பாராட்டிய இயக்குநர் ஷங்கர் | director shankar appreciates pradeep ranganathan ashwath marimuthu for dragon movie

Dragon: “கடைசி 20 நிமிடங்கள் கண் கலங்கச் செய்தது” – ‘டிராகன்’ படத்தைப் பாராட்டிய இயக்குநர் ஷங்கர் | director shankar appreciates pradeep ranganathan ashwath marimuthu for dragon movie


`ஓ மை கடவுளே’ அஸ்வத் மாரிமுத்து இயக்கியிருக்கும் இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இயக்குநர்கள், நடிகர்கள் எனப் பலரும் இப்படத்திற்குப் பாராட்டுகளைத் தெரிவித்து வருகிறார்கள். அந்த வரிசையில் இயக்குநர் ஷங்கர் இப்படத்தைப் பார்த்துவிட்டுப் படக்குழுவைப் பாராட்டி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு ஒன்றைப் போட்டிருக்கிறார்.

அந்தப் பதிவில் அவர், “`டிராகன்’ – அழகான திரைப்படம். இப்படத்தை அற்புதமாக எழுதிய இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துக்கு வாழ்த்துகள். படத்தில் அத்தனை கதாபாத்திரங்களுக்கும் அழகான மற்றும் முழுமையான பயணம் இருக்கிறது. தான் ஒரு அதிரடியான என்டர்டெயினர் என்பதையும் வலிமையானவர் என்பதையும் மீண்டுமொரு முறை நிரூபித்திருக்கிறார் பிரதீப் ரங்கநாதன்.

இதுமட்டுமல்ல பிரதீப் ஒரு நல்ல பெர்பாமெரும்கூட. இயக்குநர் மிஷ்கின், அனுபமா பரமேஸ்வரன், ஜார்ஜ் மரியம் ஆகியோர் மனதில் நிலைத்திருக்கும்படியான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். அனைத்து `ஜென் – சி’ மற்றும் மில்லினியல் கதாபாத்திரங்களும் நன்றாக நடித்திருக்கிறார்கள். படத்தின் கடைசி 20 நிமிடங்கள் என்னைக் கண்கலங்கச் செய்தது. இந்த உலகத்தில் ஏமாற்று வேலைகள் அதிகரித்துக் கொண்டிருக்கும் வேளையில் இப்படம் சொல்லும் மெசேஜ் மிகவும் முக்கியமானது” எனப் பதிவிட்டிருக்கிறார்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *