தீபாவளியை முன்னிட்டு வெளியான `டியூட்” திரைப்படத்தைப் பார்த்துள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் படத்தின் இயக்குநரைப் பாராட்டியுள்ளார்.
“Dude – சமூகத்தின் முக்கிய சிக்கலைக் கையாண்டிருக்கிறார்”
செய்தியாளர்கள் முன்னிலையில் பேசிய அவர், ” காதலை மையமாகக் கொண்டு இந்தத் திரைப்படம் ஆணவக் கொலைக்கு எதிராகவும் பேசுகிறது. காதலுக்கு சாதி, மதம், பொருளாதாரம் போன்ற எந்த வரையறையும் தேவையில்லை. இரு மனங்கள் போதும் என்ற வரையறையை முன்னிறுத்தி இந்தத் திரைப்படத்தை கீர்த்தீஸ்வரன் இயக்கியிருக்கிறார்.
தொடக்கத்திலிருந்து கடைசி வரையில் பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் காட்சி அமைப்புகளால் அடுத்து என்ன அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பை திரைப்படத்தின் ஓட்டம் உருவாக்குகிறது. இறுதியாக இது எப்படி போய் முடியும் என்கிற ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.

