எப்போதும் A முதல் Z வரை ஹீரோ மெட்டீரியல் என யாரையும் சொல்ல முடியாது. அனைவரும் ஹீரோக்கள்தான்.
ஒரு ஹீரோவைப் போல தோற்றமளிக்க… ஒரு ஹீரோவுக்கான எந்த வரையரையும் இல்லை. சமூகத்திற்கு நன்மை நடக்கும் செயல்களைச் செய்பவரே ஹீரோ” என்றார்.
தொடர்ந்து பேசிய பிரதீப் ரங்கநாதன், “கடின உழைப்பு இருக்கிறது. கடந்த சில மாதங்களாக எனக்குக் கிடைத்து வரும் அன்பைப் பற்றி நான் யோசித்து வருகிறேன்.
என்னைப் போன்ற திறமையானவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். நான் பார்த்திருக்கிறேன். மக்கள் என்னில் தங்களைப் பார்க்கிறார்கள் என்று நினைக்கிறேன்.
அவர்கள் திரையைப் பார்க்கும்போது, அவர்கள் தாங்களே ஹீரோ என்று உணர்கிறார்கள். அவர்களே அதில் நடிக்கிறார்கள். காதல் செய்கிறார்கள், சண்டை போடுகிறார்கள்.
எனவே, அவர்கள் என்னில் தங்களைப் பார்க்கும்போது, நான் ஹீரோவாகிறேன்” என்றார்.
இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலான நிலையில், சரத்குமாரின் மனைவி நடிகை ராதிகா, “இது என்ன மாதிரியான கேள்வி? சரத்குமார் உங்களின் பதில் சிறப்பாக இருந்தது.
நன்றாகச் சொன்னீர்கள். பிரதீப், உங்களுக்கு இன்னும் நிறைய ஆற்றல் இருக்கிறது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.