பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான திரைப்படம் `லூசிஃபர்”. இப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியிருக்கும் `எல் 2: எம்பூரான்’ வருகிற 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தில் மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ், விவேக் ஓபராய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். மலையாளம், தமிழ், தெலுங்கு இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் இப்படத்தின் டிரெயிலரைப் படக்குழு வெளியிட்டிருக்கிறது. இதனைத்தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் தனது எக்ஸ் தளத்தில் ‘எம்பூரான்’ படக்குழுவைப் பாராட்டி பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ” எனது அருமை மோகன்லால் நடிப்பில், பிரித்விராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘எம்பூரான்’ படத்தின் டிரெயிலரைப் பார்த்தேன். மிகவும் அற்புதமான படைப்பு. படக்குழுவினருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். இறைவனைப் பிராத்திக்கிறேன்” என்று பதிவிட்டிருக்கிறார்.