நடிகை ரேவதி இயக்கத்தில் உருவாகியிருக்கும் “குட் வைஃப்’ வெப் சீரிஸ் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது.
இதே தலைப்பிலான அமெரிக்க வெப் சீரிஸின் தமிழ் ரீமேக்காக இதனை எடுத்திருக்கிறார்கள். இந்த சீரிஸில் ப்ரியாமணி, ஆரி, சம்பத் ராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
இந்த சீரிஸின் வெளியீட்டை ஒட்டி படக்குழுவினரைச் சந்தித்து பேட்டி கண்டோம்.
இதில் நடிகர் சம்பத் ராஜ், ‘கோவா’ படத்தில் அவர் நடித்த கதாபாத்திரத்தை வைத்து தனது மகளைக் கிண்டல் செய்ததாகத் தெரிவித்திருக்கிறார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான ‘கோவா’ திரைப்படத்தில் சம்பத் ராஜ் தன்பாலின ஈர்ப்பாளராக நடித்திருப்பார்.