HBD Ajith Kumar: 'பைக் மெக்கானிக் டு பத்ம பூஷன்' - சினிமாவை தாண்டி அஜித் செய்த ஓஜி சம்பவங்கள்! |Ajith Kumar

HBD Ajith Kumar: ‘பைக் மெக்கானிக் டு பத்ம பூஷன்’ – சினிமாவை தாண்டி அஜித் செய்த ஓஜி சம்பவங்கள்! |Ajith Kumar


திடீர்னு தான் சினிமாவுக்கு வந்துட்டேன். சினிமாவுல நிறுத்திக்கப் போராட வேண்டியிருந்தது. ரேஸ்ல இறங்க, சம்பாதிக்க வேண்டியிருந்தது. ஓடிட்டே இருந்தேன்.

எந்நாளாவது ஒரு நாள் ரேஸ்ல பிரமாதமா ஜெயிப்பேன். அதுக்காக கடுமையாகப் பயிற்சி எடுக்கிறேன். இன்டர்நேஷனல் லெவல்ல சில போட்டிகளில் நாலாவதா, ஆறாவதா வர்ற அளவுக்கு முன்னேறியிருக்கேன்.

ஒரு நாள் சாதிச்சுக் காட்டுவேன் பாருங்க, அப்போ புரியும் என்னோட எல்லா வலியும்!” என 2004-ம் ஆண்டு ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியில் உணர்ச்சி ததும்ப ரேஸிங் மீதுள்ள காதல் குறித்து பேசியிருக்கிறார் அஜித்.

அவர் சொன்னது போலவே அன்று சில வெற்றிகளை அடுக்கினார். இதோ, இன்றும் பல சர்வதேச கார் பந்தயங்களில் வெற்றிகளைப் பதித்து சாதனை படைத்து வருகிறார்.

இப்படி ரேஸிங் சமயத்தில் அஜித் நடித்த ‘ஆஞ்சநேயா’ திரைப்படம் நினைத்த அளவுக்கு திரையரங்குகளில் சோபிக்கவில்லை.

அந்தச் சமயத்தில் பலரும், “அஜித்துக்கு சினிமாவில் ஆர்வமும் குறைஞ்சு போச்சு. ரேஸிங் ரேஸிங்னு கிளம்பிடுறார்,” எனப் பலரும் புகார் கூறி பேசவும் எழுதவும் செய்தார்கள்.

ஆனால், இப்படியான பேச்சுகளைப் பெரிதாக செவிகளுக்கு எடுத்துக் கொள்ளாமல், அடுத்து ‘அட்டகாசம்’ படத்தின் மூலம் ஹிட் கொடுத்தார்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *