idly kadai movie; ``மிருனாள் எனத் தவறாக வாசித்தால் அதற்கு நான் பொறுப்பல்ல" - நடிகர் பார்த்திபன்

idly kadai movie; “மிருனாள் எனத் தவறாக வாசித்தால் அதற்கு நான் பொறுப்பல்ல” – நடிகர் பார்த்திபன்


தனுஷ் இயக்கத்தில் 4 வது படமாக உருவாகிவருகிறது “இட்லிக் கடை’. தனுஷின் 52-வது படமான இட்லி கடை படத்தில் கதாநாயகியாக நித்யா மேனன், வில்லன் கதாபாத்திரத்தில் அருண் விஜய், ராஜ் கிரண், சிறப்புத் தோற்றத்தில் நடிகர் பார்த்திபன் நடித்திருக்கின்றனர்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப் படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அக்டோபர் மாதம் வெளியாக இருக்கிறது. படத்தின் ஆடியோ உரிமையை சரிகம இசை நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்தப் படத்தில் நடித்தது குறித்து நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் தன் இன்ஸ்டாகிராம் பகிர்ந்திருக்கிறார்.

பார்த்திபன் - தனுஷ்

பார்த்திபன் – தனுஷ்

அதில், “இன்னொரு தேசிய விருது வாங்கி இருக்க வேண்டிய ஆடுகளத்தில் நான் நடிக்க முடியாமல் போனதும், இணைந்து நடித்த ‘ சூதாடி’ இடையில் நின்று போனதும், இவையாவையும் ஈடு கட்டும் விதமாக ‘ இட்லிக் கடை’யில் ஒரு சிறு மினி இட்லியாக கௌரவ வேடத்தில் நடிக்க அவரே அழைத்த போது, மறுக்காமல் ஒப்புக் கொண்டேன்.

நேற்று டப்பிங் நிறைவு பெற்றது. இரும்பினும் சக்தி கொண்ட இதயத்தோடு, எறும்பினும் சுறுசுறு உழைப்போடு, சகலகலா வல்லவனாக, அகில இந்திய நட்சத்திரமாக தனுஷ் மிளிரினால் (மிருனாள் எனத் தவறாக வாசித்தால் அதற்கு நான் பொறுப்பல்ல ஏனெனில் அது தான் பிசுபிசுத்த கிசுகிசுவாய் போய் விட்டதே) அது ஆச்சர்யமில்லை என்பதை கண் கூடாகக் கண்டேன்
இட்லிக் கடையில். அக்டோபரில் வெந்து விடும் sorry
வந்து விடும்!!!” எனப் பதிவிட்டிருக்கிறார்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *