இந்நிலையில்தான், இளையராஜா இந்த வழக்கில் சாட்சியம் அளிப்பதற்காகச் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திலுள்ள மாஸ்டர் நீதிமன்ற நீதிபதி பி.இளங்கோ முன்பு இன்று ஆஜரானார். அப்போது, இளையராஜாவிடம் மூத்த வழக்கறிஞர் பி.ஆர்.ராமன் குறுக்கு விசாரணை மேற்கொண்டார். சாட்சி கூண்டில் நின்ற இளையராஜாவிடம், பாடல்களின் பதிப்புரிமை, தயாரிப்பாளர்களிடம் மேற்கொண்ட ஒப்பந்தம், சொத்து மதிப்புகள் தொடர்பாகக் கேள்விகள் கேட்கப்பட்டன.
அதில், தங்களிடம் எத்தனை பங்களாக்கள் இருக்கிறது என்று வழக்கறிஞர் எழுப்பிய கேள்விக்கு, “எனக்கு முழு ஈடுபாடும் இசையில் உள்ளதால், உலகளாவிய பொருள்களைப் பற்றி எனக்குத் தெரியாது” என்று இளையராஜா பதிலளித்தார். மேலும், “பெயர், புகழ், செல்வம் அனைத்தும் சினிமா மூலம் கிடைத்தது என்பது உண்மையா?” என்ற கேள்விக்கு, “அனைத்தும் சினிமா மூலம் கிடைத்தது” என்று இளையராஜா கூறினார்.
இளையராஜாவிடம் சுமார் ஒரு மணி நேரம் நடந்த சாட்சி விசாரணை முடிவில் நீதிபதி, வழக்கை மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அனுப்பி உத்தரவிட்டார்.