Jason Sanjay: ஜி.கே. மணியின் இல்ல திருமண விழா; ஜேசன் சஞ்சய், விஜய் சேதுபதி சேலம் விமான நிலையம் வருகை | jason sanjay arrives at salem for gk mani grandson marriage

Jason Sanjay: ஜி.கே. மணியின் இல்ல திருமண விழா; ஜேசன் சஞ்சய், விஜய் சேதுபதி சேலம் விமான நிலையம் வருகை | jason sanjay arrives at salem for gk mani grandson marriage


`லைகா நிறுவனம்” தயாரிப்பில் தன்னுடைய முதல் படத்தை இயக்கவிருக்கிறார், ஜேசன் சஞ்சய். இப்படத்தில் சந்தீப் கிஷன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். மேலும், இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இத்திரைப்படம் குறித்தான அதிகாரப்பூர்வமான தகவலைச் சில மாதங்களுக்கு முன்பு லைகா நிறுவனம் வெளியிட்டிருந்தது.

தற்போது இத்திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கிவிட்டது எனச் சமூக வலைத்தளப் பக்கங்களில் பேசப்பட்டாலும், தயாரிப்பு நிறுவனம் தரப்பிலிருந்து படப்பிடிப்பு தொடர்பாக எந்தவொரு அதிகாரப்பூர்வமான தகவலும் இதுவரை வெளிவரவில்லை.

விஜய் மகன் ஜேசன் சஞ்சய்

விஜய் மகன் ஜேசன் சஞ்சய்

இந்நிலையில், பா.ம.க கெளரவ தலைவரும், சட்டமன்றக் குழுத் தலைவருமான ஜி.கே. மணியின் பேரனுடைய திருமண விழாவில் பங்கேற்பதற்காக இன்று (பிப்ரவரி 25) சேலம் விமான நிலையத்திற்கு வந்திறங்கியிருக்கிறார் ஜேசன் சஞ்சய். அரசியல் வட்டத்தைத் தாண்டி சினிமா வட்டத்திலிருந்து விஜய் சேதுபதி, ஜேசன் சஞ்சய் ஆகியோரும் ஜி.கே.மணியின் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்கின்றனர். ஜி.கே. மணியின் மகனான ஜி.கே.எம். தமிழ்குமரன்தான் லைகா தயாரிப்பு நிறுவனத்தில் தலைமைச் செயல் அதிகாரியாக இருக்கிறார்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *