Kajal Agarwal விளக்கம்
“நான் விபத்தில் சிக்கிவிட்டதாகவும் (இறந்துவிட்டதாகவும்) சில ஆதாரமற்ற செய்திகள் பரவின. ஆனால் அதில் ஒரு துளியும் உண்மை இல்லை.
கடவுள் கருணையால், நான் மிகவும் சிறப்பாகவும், பாதுகாப்பாகவும், நலமுடனும் இருக்கிறேன் என்பதை உறுதியாகச் சொல்கிறேன்.
எனவே, பொய்யான செய்திகளை நம்ப வேண்டாம். பாசிட்டிவான, உண்மையான விஷயங்களில் கவனம் செலுத்துவோம்” என காஜல் அகர்வால் விளக்கமளித்துள்ளார்.
காஜல் அகர்வால் இந்த ஆண்டு சிக்கந்தர் மற்றும் கண்ணப்பா படங்களில் தோன்றியிருந்தார். தொடர்ச்சியாக, அவரது நடிப்பில் கமல் ஹாசனின் இந்தியன் 3 படம் வெளி வரும் நிலையில் உள்ளது. மேலும், நிதிஷ் திவாரி இயக்கத்தில் உருவாகும் ராமாயணா படத்தில் ராவணனின் மனைவி மண்டோதரி பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.