Kantara: ``என்னை ரிஷப் ஷெட்டி சார் மாஸ்டர்னுதான் கூப்பிடுவார்!" - `காந்தாரா' அனுபவம் பகிரும் சம்பத் ராம்! | Kantara: "Rishab Shetty Sir Calls Me Master!" - Sampath Ram Shares His 'Kantara' Experience!

Kantara: “என்னை ரிஷப் ஷெட்டி சார் மாஸ்டர்னுதான் கூப்பிடுவார்!” – `காந்தாரா’ அனுபவம் பகிரும் சம்பத் ராம்! | Kantara: “Rishab Shetty Sir Calls Me Master!” – Sampath Ram Shares His ‘Kantara’ Experience!


ரிஷப் ஷெட்டி சார் இயக்குநராக செய்த படங்களையும் நான் தொடர்ந்து பாலோவ் பண்ணீட்டுதான் இருந்தேன். `காந்தாரா’ திரைப்படம் வெளியாகி இந்தியா முழுக்க பெரும் பேசு பொருளானது.

̀சைனைட்’ படத்துல என்னுடைய பெயர் மாஸ்டர்னு வரும். அப்போதுல இருந்தே என்னை ரிஷப் ஷெட்டி சார் மாஸ்டர்னுதான் கூப்பிடுவார். ̀காந்தாரா’ ரிலீஸுக்குப் பிறகு நண்பர்கள் மூலமாக ரிஷப் ஷெட்டி சார் நம்பர் வாங்கி மெசேஜ் பண்ணி வாழ்த்துச் சொன்னேன்.

உடனடியாக, அவரும் எனக்கு கால் பண்ணி “மாஸ்டர் எப்படி இருக்கீங்க. அடுத்தப் படத்துல பண்றோம்’னு சொல்லியிருந்தாரு.

சம்பத் ராம்

சம்பத் ராம்

சொன்னதுபோலவே, `காந்தாரா சாப்டர் 1′ படத்திற்காக என்னை ஆடிஷனுக்கு கால் பண்ணி கூப்பிட்டாரு. நான் வேறொரு இடத்துக்கு போக வேண்டிய அவசர சூழல்ல ஆடிஷன் செய்தேன்.

சொல்லப்போனால், அந்த ஆடிஷனை நான் சரியாக பண்ணலனு எனக்கே தோனுச்சு. நான் தெலுங்கு பேசுவேன். ஆனா, கன்னட மொழியை மனப்பாடம் பண்ணிதான் பேசவேன்.

மூணு, நாலு வரிகள் இருந்தா, ஈஸியா மனப்பாடம் செய்து பண்ணிடலாம். ஆனா, ஆடிஷன் செய்த கேரக்டருக்கு பக்கங்கள்ல வசனங்கள் இருந்தது. மதியம் வரைக்கும் ஆடிஷன் நடந்தது. சரியாக ஆடிஷன் செய்யாத நான் பார்ப்போம்னு விட்டுடேன்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *