எஸ்.ஜே.சூர்யா நாயகனாக நடிக்கும் கில்லர் திரைப்படத்தை அவரே இயக்குகிறார். இதில் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் இணைந்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கில்லர் படத்தின் பூஜை கடந்த ஜூன் 30ம் தேதி நடைபெற்றது. இதில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக அயோத்தி படத்தில் நடித்த ப்ரீத்தி அஸ்ரானி நடித்து வருகிறார்.
தமிழ் சினிமாவின் கவனிக்கத்தக்க இயக்குநர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் எஸ்.ஜே.சூர்யா. இவரது வித்தியாசமான கதைக்களங்கள் ரசிகர்களின் விருப்பத்துக்குரியதாக இருந்துவந்துள்ளன.
ஆரம்பக்காலத்தில் அஜித், விஜய் போன்ற ஸ்டார்களுக்கு மைல் கல்லாக அமையும் திரைப்படங்களை எஸ்.ஜே.சூர்யா இயக்கியுள்ளார்.