kiss: `கவின் உள்ளிட்ட படக்குழுவினருக்கு '- வாழ்த்தி நெகிழும் நெல்சன், அனிருத் | Kiss: `To the film crew including Kavin' - Nelson, Anirudh express their gratitude

kiss: `கவின் உள்ளிட்ட படக்குழுவினருக்கு ‘- வாழ்த்தி நெகிழும் நெல்சன், அனிருத் | Kiss: `To the film crew including Kavin’ – Nelson, Anirudh express their gratitude


சின்ன திரையிலிருந்து வெள்ளி திரைக்கு வந்து வெற்றிகரமாக வளர்ந்து வருபவர் நடிகர் கவின். தன் இயல்பான நடிப்பாலும், திரைக்கதை தேர்வாலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறார்.

`லிஃப்ட்” படத்தில் தொடங்கி `டாடா’ வரை அவரின் திரைப்பயணம் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், அவரின் அடுத்த படமாக ‘கிஸ்’ வெளியாகியிருக்கிறது.

டான்ஸ் மாஸ்டர் சதீஷின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில், அயோத்தி புகழ் ப்ரீத்தி அஸ்ரானி, விஜே விஜய், விடிவி கணேஷ், நடிகர் பிரபு, தேவயாணி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் இசையமைத்திருக்கிறார். இந்தப் படம் நேற்று வெளியாகி காதல், பேன்டசி, காமெடி என ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

இந்தப் படத்தில் நடிகர் கவின் கதாப்பாத்திரத்தின் பெயர் நெல்சன். இந்த நிலையில், இயக்குநர் நெல்சன் தன் எக்ஸ் பக்கத்தில், “கிஸ் திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. என் நண்பர்களின் சூப்பர் ஹிட் வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது.

மாஸ்டர் சதீஷ், நடிகர் கவின், ப்ரீத்தி அஸ்ரானி உள்ளிட்ட படக் குழுவுக்கு வாழ்த்துகள்” எனப் பதிவிட்டிருக்கிறார். இசையமைப்பாளர் அனிரூத் தன் எக்ஸ் பக்கத்தில், “கிஸ் படத்துக்கான பெரும் வரவேற்பு மகிழ்ச்சியளிக்கிறது. மொத்தப் படக்குழுவுக்கும் வாழ்த்துகள்” எனப் பதிவிட்டிருக்கிறார்.

இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நடிகர் கவின் தன் எக்ஸ் பக்கத்தில், “வார்த்தைக்கு வாயில்லை” எனப் பதிவிட்டிருக்கிறார்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *