இப்போ ‘குஷி’ படத்தை ரீரிலீஸ் செய்வதாக அறிவிப்பு வந்ததும் எக்கச்சக்கமான நபர்கள் அதை ஷேர் பண்ணி கொண்டாடி எனக்கு வாழ்த்து தெரிவிக்கிறாங்க.
புதிய பட ரிலீஸைவிட இந்த ரிரிலீஸுக்கு டபுள் மடங்கு வாழ்த்துகள் என்னை வந்து சேர்ந்தது எனக்கு ஆச்சரியத்தைக் கொடுத்துச்சு.
மக்கள் வாழ்த்துகளாகச் சொன்ன விஷயங்கள் மூலமாகவே அவங்க எந்தளவுக்கு எதிர்பார்ப்போட இருக்காங்கனு என்னால புரிஞ்சுக்க முடியுது.
நிச்சயமாக, மக்களைத் திருப்திபடுத்துறதுக்கு படத்தோட தரத்தை இன்னும் மெருகேற்றிக் கொண்டு வர்றோம். இப்போ மட்டுமல்ல, அப்போதே படத்தை ஏ. எம். ரத்னம் படத்தைப் பிரமாண்டமாக எடுத்து வச்சிருக்காரு.
பாடல்களாக இருந்தாலும் அதைத் தரமாகக் கொண்டு வந்து ஆடியன்ஸுக்குப் பிடிக்க வைக்கணும்னு ஏ.எம். ரத்னம் சார் நினைப்பாரு. இப்போதும் விஷுவலாகவும், ஆடியோவாகவும் மெருகேற்றி திரைக்குக் கொண்டு வர்றோம்.
அதுவும் பார்வையாளர்களுக்கு பக்கா ட்ரீட்டாக இருக்கும்” என்றவரிடம், ‘ஏதும் ட்ரிம் செய்திருக்கிறீர்களா ?’ எனக் கேட்டோம். பதில் தந்த அவர், “இல்லைங்க, படத்தோட அதே அளவுலதான் கொண்டு வர்றதுக்குத் திட்டமிட்டிருக்கோம்.
இப்போ வரைக்கும் ஏதும் ட்ரிம் செய்றதுக்கு ப்ளான் பண்ணல” என்றார். மேலும் பேசிய அவர், ‘கில்லி’ படத்தோட ரீரிலீஸ் சமயத்துல நானும் ஏ.எம். ரத்னம் சாரும் விஜய் சாரைச் சந்திச்சிருந்தோம்.