லோகேஷ் கனகராஜ் பேசுகையில், “என்னுடைய முதல் படமான ‘மாநகரம்’ படத்தின் வெளியீடு சமயத்தில் என்னுடைய குடும்பத்தைப் பற்றி நான் பேசியிருப்பேன்.
அதன் பிறகு என்னுடைய குடும்பத்தைப் பற்றி நான் எங்கும் பேச விரும்பவில்லை. அவர்களுடைய சுதந்திரத்தை ஏன் கெடுக்க வேண்டும், என்பதுதான் என்னுடைய எண்ணம்.
சமூக வலைதளப் பக்கங்களில் அவரை டேக் செய்து பதிவிடப்படும் பதிவுகள், அவர்களை எவ்வளவு பாதிக்கும் என்பதை சிந்தித்துதான் இதை செய்கிறேன்.
இன்றைய தேதியில், சமூக வலைதளப் பக்கங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியதாகவுள்ளது. சமீபத்தில் கூட, நான் அறியாமல் ஒரு பதிவை லைக் செய்துவிட்டேன்.

அதனைத் தொடர்ந்து, என்னை பல பக்கங்களில் இருந்து தொடர்பு கொண்டு, ஏன் அப்படி செய்தீர்கள் என கேட்டார்கள். இப்படியான விஷயங்களால்தான், வளர்ந்து வரும் குழந்தைகள் நிம்மதியாக வளரட்டும் என சிந்திக்கிறேன்.
ஒரு பஸ் நடத்துனரின் மகனாக இருந்தபோது எனக்கு எவ்வளவு மகிழ்ச்சி இருந்ததோ, அதுபோல என் குடும்பத்தினரும் மகிழ்ச்சியாக இருக்கட்டும். மற்றபடி என் குடும்பத்தினர் பற்றிய தகவல்களை மறைப்பதில் வேறொன்றும் இல்லை.
ஷூட்டிங் சமயத்தில் மாதத்திற்கு இரண்டு முறை வீட்டிற்குச் சென்றாலே பெரிய விஷயமாக இருக்கும். இதை நான் பெரிய தியாகமாகப் பார்க்கவில்லை.
இந்த துறை இப்படிதான் இருக்கும் என நாம் தெரிந்துதான் வந்திருக்கிறோம். எல்லோருமே, என்னைப் புரிந்துக் கொள்கிறார்கள்.” எனப் பகிர்ந்திருக்கிறார்.