`லியோ” படத்திற்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்தை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் படம் ‘கூலி’.
இப்படத்தில் நாகர்ஜூனா, சத்யராஜ், உபேந்திரா, செளபின் சாஹிர், ஸ்ருதி ஹாசன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி இத்திரைப்படம் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் ஹாலிவுட் ரிப்போர்டரின் இந்திய பதிப்பிற்கு பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார்.
அதில் பகத் பாசில் இந்தப் படத்தில் நடிக்க இருந்ததாகத் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக பேசிய அவர், “ செளபின் சாஹிர் கதாபாத்திரம் முதலில் பகத் பாசிலுக்காக எழுதப்பட்டது.
ஆனால், கால் சீட் காரணமாக அவரால் நடிக்கமுடியவில்லை. அந்தக் கதாபாத்திரத்தை உருவாக்க ஆறு மதங்களுக்கும் மேலாக செலவிட்டேன்” என்று கூறியிருக்கிறார்.