Love Marriage: "இது 90ஸ் கிட்ஸோட பிரதிபலிப்பு!" - பட விழாவில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் |Love Marriage Movie | Adhik Ravichandran

Love Marriage: “இது 90ஸ் கிட்ஸோட பிரதிபலிப்பு!” – பட விழாவில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் |Love Marriage Movie | Adhik Ravichandran


இந்தப் படத்தோட பாடல்கள், டிரெய்லர்களெல்லாம் முன்னாடியே எனக்கு காட்டியிருந்தாங்க. மிஷ்கின் சாரோட பாடலைக் கேட்கும்போது 30 நொடிகள் முடிஞ்சதுமே இந்தப் பாடல் பெரிய ஹிட்டாகும்னு சொன்னேன்.

ஒரு படத்துக்கான நேர்மறையான விஷயங்கள் அந்தப் படத்தோட டைட்டிலில் இருந்தே தொடங்கும்னு நான் நம்புவேன். இந்தப் படத்தோட டைட்டிலே பெரிய சக்சஸ்னு நான் நினைக்கிறேன்.

Adhik Ravichandran - Love Marriage

Adhik Ravichandran – Love Marriage

புதுமுக இயக்குநராக இப்படியான ஒரு படத்தோட வர்ற இயக்குநர் ஷண்முக ப்ரியனுக்கு வாழ்த்துகள். ‘கும்கி’ படத்தோட முதல் நாள் முதல் காட்சியில் விக்ரம் பிரபு சாருக்கு பெரியளவிலான வரவேற்பு கிடைச்சது.

புதிய நடிகருக்கு அப்படியான ஒரு வரவேற்பு கிடைக்கிறது பெரிய விஷயம். ‘Boy next door’ கதாபாத்திரங்களிலும், எக்ஸ்பிரிமெண்டல் கதைகளிலும் விக்ரம் பிரபு சார் அதிகமாக நடிக்கிறாரு. இந்தப் படம் வெற்றிப் படமாக அமையறதுக்கு அவருக்கு வாழ்த்துகள்.” எனப் பேசினார்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *