சிவகார்த்திகேயன் ஆக்ஷன் காட்சிகள் வரும்போது பயமாக இருக்கும்னு பேட்டிகளில் சொல்கிறாரே, அவரைக் கோரியோ பண்றது எப்படி இருக்கும்?
சிவகார்த்திகேயன் சார் அவருடைய 1000 சதவீதத்தைப் படத்துக்கு கொடுத்திருக்காரு. 100 சதவீதம்னு சொல்லமாட்டேன். ஏன்னா, அந்தளவுக்கு முழுமையாக உழைப்பை அவர் படத்திற்கு தந்திருக்காரு.
நாங்க சொல்ற ஒவ்வொரு ஸ்டண்ட் காட்சிகளையும் அவர் அப்படியே பண்ணல. அனைத்தையும் உள்வாங்கி கணகச்சிதமாக திரையில் பிரதிபலிச்சாரு.
எனக்கு எஸ்.கே. சாரையும், வித்யூத் சாரையும் டயர்ட் ஆக்கணும்ங்கிறதுதான் ஒரே எண்ணமாக இருந்தது. ப்ரஷ்ஷாக இருந்தால் அவங்ககிட்ட நான் பெர்ஃபெக்ஷன் எதிர்பார்க்க முடியாது.
ஆனா, அதுவே கொஞ்சம் சோர்வாகிட்டால், இருடா சீக்கிரம் சரியாக முடிக்கிறேங்கிற’ எண்ணம்தான் இருக்கும். அதுக்காக நான் சில முயற்சிகளைச் செய்திருந்தேன்.
என்னுடைய அப்பா எனக்கு சில விஷயங்கள் சொல்லிக் கொடுத்திருக்கார். அவர் ‘பிதாமகன்’ படத்துல விக்ரம் சார் கேரக்டருக்கு சில விஷயங்கள் விலங்குகள்கிட்ட இருந்து எடுத்து வச்சிருப்பார்.
அப்படியான ஒரு முறையை நான் ‘மதராஸி’ எஸ்.கே. சார் கேரக்டருக்கு முயற்சி செய்திருக்கேன். அதுதான் ப்ரோ அனிமல் இன்ஸ்டிங்க்ட்’.