அந்த நகரத்தின் வரலாறு, கலை, அமைதியான அழகை நேரில் பார்க்க வைக்க வேண்டும் என்று விரும்பியிருக்கிறேன்.
நாங்கள் சின்ன சின்ன தெருக்களைச் சுற்றி வந்தோம். காபி ஷாப்பில் நேரத்தைக் கழித்தோம்.
பாரிஸ் நகரம் தந்த அந்த அழகிய உணர்வில் மூழ்கினோம். என் பெற்றோர்களுக்கு இந்த உலகத்தைச் சுற்றி காண்பிக்க நினைக்கிறேன்.
என்னையும், சகோதரரையும் அப்பா நிறைய இடங்களுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.
அதுதான் இன்று எங்களை செதுக்கி இருக்கிறது. எங்கள் பெற்றோர் எங்களுக்கு செய்ததை நாங்கள் அவர்களுக்கு செய்ய நினைக்கிறோம்” என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.

