Manidhargal Review: மனிதர்கள் விமர்சனம்; அசத்தல் மேக்கிங்; ஆனால் அதீத எமோஷன்; மனதிற்கு நெருக்கமாகிறார்களா இந்த மனிதர்கள்?

Manidhargal Review: மனிதர்கள் விமர்சனம்; அசத்தல் மேக்கிங்; ஆனால் அதீத எமோஷன்; மனதிற்கு நெருக்கமாகிறார்களா இந்த மனிதர்கள்?


முழுக்க ஓர் இரவில், பெரும்பாலும் காருக்குள்ளேயே நகரும் படத்திற்கு, ஒளி அமைப்பால் அட்டகாசமான ஒளிப்பதிவைக் கொடுத்திருக்கிறார் அஜய் ஆபிரகாம் ஜார்ஜ்.

முக்கியமாக, கார் ஹெட்லைட்டை மட்டும் பயன்படுத்திய காட்சிகளில் தன் பெயரைப் பதிக்கிறார் அஜய்!

இயக்குநரின் திரைமொழிக்கு இயைந்து, விறுவிறுப்பையும் பதற்றத்தையும் குறைய விடாமல் கடத்தியிருக்கிறார் படத்தொகுப்பாளர் தின்சா.

கச்சிதமான கட்-கள் பல காட்சிகளைக் கூர்மையாக்கியிருக்கின்றன.

ஆற்றாமை, அழுகை, பயம், குற்றவுணர்வு என அடுத்தடுத்து அணிவகுக்கும் உணர்வுகளுக்குக் குரலாக ஒலித்திருக்கிறது அனிலேஷ் எல் மாத்யூவின் பின்னணி இசை.

அதே சமயம் வசனங்களுக்கான ஒலி வடிவமைப்பில் தெளிவும், துல்லியமும் மிஸ்ஸானது பெரிய மைனஸ்!

மனிதர்கள் விமர்சனம் | Manidhargal Review

மனிதர்கள் விமர்சனம் | Manidhargal Review

ஓர் இரவு, ஐந்து நண்பர்கள், ஒற்றைச் சம்பவம், அதைத் தொடர்ந்து நடக்கும் பதைபதைப்பு நிறைந்த சம்பவங்கள் போன்றவற்றை த்ரில்லர் மோடில் ‘ராவாக’ சொல்ல முயன்றிருக்கிறார் அறிமுக இயக்குநர் இராம் இந்திரா.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *