Mookuthi Amman 2: `தயங்கி தயங்கிதான் சொன்னேன்; என்னுடைய கரியர்லேயே மிகப்பெரிய படம் இது' - சுந்தர்.சி

Mookuthi Amman 2: `தயங்கி தயங்கிதான் சொன்னேன்; என்னுடைய கரியர்லேயே மிகப்பெரிய படம் இது' – சுந்தர்.சி


`மூக்குத்தி அம்மன் 2′ திரைப்படம் இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகவிருக்கிறது.

மூக்குத்தி அம்மனாக நயன்தாரா முதல் பாகத்தை தொடர்ந்து இரண்டாவது பாகத்திலும் நடிக்கவிருக்கிறார். இவரை தாண்டி மீனா, ரெஜினா, யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கவிருக்கிறார்கள்.

Thedalweb Mookuthi Amman 2: `தயங்கி தயங்கிதான் சொன்னேன்; என்னுடைய கரியர்லேயே மிகப்பெரிய படம் இது' - சுந்தர்.சி
மூக்குத்தி அம்மன் பூஜை ஸ்டில்ஸ்

இப்படத்திற்கு இன்று சென்னை பிரசாத் ஸ்டுடியோஸில் பூஜை போடப்பட்டிருக்கிறது. அதனை தொடர்ந்து படத்தினுடைய முதல் ஷாட்டையும் சுந்தர். சி இங்கு எடுத்திருக்கிறார்.

இந்த நிகழ்வில் பேசிய சுந்தர்.சி, “இந்த படம் ஐசரி.கே. கணேஷ் சாரோட விஷன். இயக்குநராக, எழுத்தாளராக எங்களுக்கு பல விஷயங்கள் தோணும். அதையெல்லாம் நடத்தி காட்டுறதுக்கு பின்னாடி இருந்து ஒரு சக்தி வேணும். அப்படியான சக்தியாகதான் எங்களுக்கு ஐசரி சார் கிடைச்சாரு. இந்தப் படத்தினுடைய ஸ்கிரிப்ட் அமைஞ்சதும் அது மிகப்பெரிய படமாக வந்துடுச்சு. இதுவரைக்கும் என்னுடைய கரியர்ல நான் பண்ற மிகப்பெரிய படம் இதுதான். இந்தியாவின் மிகப்பெரிய படங்களில் இது ஒன்றாக அமையும்.

Mookuthi Amman 2 Pooja Nayanthara Sundar C Hiphop Tamizha Vels Film International 1 Thedalweb Mookuthi Amman 2: `தயங்கி தயங்கிதான் சொன்னேன்; என்னுடைய கரியர்லேயே மிகப்பெரிய படம் இது' - சுந்தர்.சி
சுந்தர்.சி

படத்தினுடைய பட்ஜெட் பற்றிய விஷயத்தை தயங்கி தயங்கிதான் பேசுனேன். அவர் எங்களைவிட இருமடங்கு உற்சாகமாகி படத்தினுடைய வேலைகளை கவனிக்க தொடங்கிட்டாரு. இந்த பூஜைக்கான ஏற்பாடுகளை பார்த்தாலே எந்தளவுக்கு அவர் உற்சாகமாக இருக்கார்னு தெரிஞ்சிடும். இந்தப் படத்துக்கு முதல்ல யாரையெல்லாம் யோசிச்சேனோ, அவங்களெல்லாம் இந்தப் படத்துல இணைஞ்சிருக்காங்க.” என்றார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

WhatsApp Image 2025 02 22 at 19.50.16 Thedalweb Mookuthi Amman 2: `தயங்கி தயங்கிதான் சொன்னேன்; என்னுடைய கரியர்லேயே மிகப்பெரிய படம் இது' - சுந்தர்.சி



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *