Mrs & Mr: ``நிரூபித்தால் நான் திரைத்துறையைவிட்டே விலகுகிறேன்" - நடிகை வனிதா விஜயகுமார் சவால்!

Mrs & Mr: “நிரூபித்தால் நான் திரைத்துறையைவிட்டே விலகுகிறேன்" – நடிகை வனிதா விஜயகுமார் சவால்!


வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா தயாரித்து, நடிகை வனிதா விஜயகுமார் இயக்குநராக அறிமுகமாகி நடித்திருக்கும் படம் ‘Mrs and Mr’. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, அங்கு அவர் வாங்கிய சம்பளத்தை வைத்து இந்த படத்தை தயாரித்துள்ளதாக ஏற்கனவே தெரிவித்திருந்தார். ஜூலை 11-ம் தேதி ரிலீஸ் ஆகியுள்ள இந்த படம் கலவையான விமர்சனங்களை எதிர்க்கொண்டது. குறிப்பாக இந்தப் படத்தின் காட்சிகள் பல படங்களிலிருந்து எடுக்கப்பட்டதாக திரைப்பட விமர்சகர்கள் விமர்சித்திருந்தனர்.

IMG 8496 Thedalweb Mrs & Mr: ``நிரூபித்தால் நான் திரைத்துறையைவிட்டே விலகுகிறேன்" - நடிகை வனிதா விஜயகுமார் சவால்!
வனிதா விஜயகுமார்

அதற்கு பதிலளிக்கும் விதமாக நடிகை வனிதா விஜயகுமார் தன் சமூக ஊடகப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், “நான் உங்களுக்கு ஒரு சவால் விடுகிறேன். முதலில் என்னுடைய படம் பாருங்கள். அதன் பிறகு என்னை என்னத் திட்டினாலும் நான் வாங்கிக்கொள்கிறேன். என் படத்தில் இருக்கும் எல்லா கண்டென்டும் என்னுடைய ஒரிஜினல் கண்டென்ட். சினிமா விமர்சகர்கள் மீது ஏற்கெனவே பலப் பிரச்னைகள் இருக்கிறது. சில விமர்சகர்கள் சரியாக படத்தைப் பார்க்காமல் அரைகுறையாக விமர்சிக்கிறார்கள்.

என் படத்திலிருந்து ஒருகாட்சியைக் காபி என்று உங்களால் நிரூபிக்க முடியுமா? அப்படி நிரூபித்தால் நான் திரைத்துறையைவிட்டே விலகுகிறேன். எந்தப் படத்திலிருந்தும் நான் சுருட்டவில்லை. நீங்கள் படத்தைப் பார்த்தால்தான் அது புரியும். கணவன் மனைவிக்குள் இருக்கும் மகிழ்ச்சியை அழகாக காண்பித்திருக்கிறோம். இதில் இருக்கும் எல்லா கண்டெட்டும் என்னுடையது” எனத் தெரிவித்திருக்கிறார்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *